| 245 | : | _ _ |a சறுக்கு மலை - சமணர் படுக்கைகள் - |
| 300 | : | _ _ |a குடைவரை |
| 500 | : | _ _ |a பாலாற்று வண்ணான் என்ற கிராமத்தின் அருகிலுள்ள சறுக்கு மலையின் உச்சியில் கற்கால மனித ஓவியங்கள், சமணக் குகைகள், சமணப்படுக்கைகள் ஆகியன காணப்படுகின்றன. குகை அமைந்துள்ள பாறையின் மேல் பகுதியில் பல்லவர் காலத்து ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு காணப்படுகின்றது. இக் கல்வெட்டு பல்லவ மன்னன் நிருபதுங்கவர்மனின் (869 கி.பி.) மகளால் நந்தி படாரர் என்ற சமண முனிவருக்கு இந்தக் குகை கொடை அளிக்கப்பட்டதை குறிப்பிடுகின்றது. இக்குகையில் பல சமணர் படுக்கைகள் காணப்படுகின்றன. குகை மிகவும் தாழ்வாகக் காணப்படுகின்றது. குகையின் மறுபுறமும் ஒரு வாயில் இருந்தது. குகையின் கூரையில் சமணக் குறியீடுகள் வரையப்பட்டுள்ளன. குகையின் முகப்பில் பரந்த தட்டையான பாறையின் மேல் மருந்து குழிகள் காணப்படுகின்றன. சமணக் குகையின் இடது புறம் உள்ள பாறையின் மேல் 25 அடி உயரத்தில் இரு பாறைகளின் நடுவில் உள்ள பள்ளத்தில் பத்தடி ஆழமுள்ள வற்றாத சுணை காணப்படுகின்றது. சுனையை ஒட்டியுள்ள பாறையின் தாழ்வான பகுதியில் குழிவான இடத்தில் பத்தாயிரம் ஆண்டுகள் முந்தைய பழமையான கற்கால மனித ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. வேட்டையாடும் மனிதர், நரி, குதிரை, மாடு, உடும்பு போன்ற ஓவியங்களும் காணக்கிடைக்கின்றன. |
| 520 | : | _ _ |a சறுக்குமலையில் தொல்பழங்கால ஓவியங்கள் மலையின் உச்சியில் வரையப்பட்டுள்ளன. இவை பெருங்கற்காலத்தைச் சேர்ந்தவையாக உள்ளன. மேலும் குகையில் வெட்டப்பட்டுள்ள சமணப்படுக்கைகளும், மேற்கூரையில் சமணக்குறியீடுகளும் காணக்கிடைக்கின்றன. |
| 653 | : | _ _ |a சறுக்கு மலை, பாலாற்று வண்ணான், ஆற்காடு, ஆர்க்காடு, வேலூர், சமணர், குகை, குடைவரை, சமணப்படுக்கை, நினைவிடம், பள்ளி, நிசீதிகை, அதிட்டானம் |
| 710 | : | _ _ |a திரு. குமரன் சண்முகம் |
| 752 | : | _ _ |a சறுக்குமலை-பாலாற்று வண்ணான் |c பாலாற்று வண்ணான் |d வேலூர் |f ஆற்காடு |
| 906 | : | _ _ |a கி.மு.3-ஆம் நூற்றாண்டு |
| 914 | : | _ _ |a 12.9078949 |
| 915 | : | _ _ |a 79.320393 |
| 934 | : | _ _ |a வேலூர் அருங்காட்சியகம், ஜலகண்டேசுவர் கோயில், வேலூர் கோட்டை, ஆரணி கோட்டை, அப்துல்லாபுரம் அரண்மனை |
| 995 | : | _ _ |a TVA_MON_00047 |
| barcode | : | TVA_MON_00047 |
| book category | : | கோட்டைகள் |
| cover | : |
|
| Primary File | : |